மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தேவநேய பாவாணர் பேத்தி மரணம்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தேவநேய பாவாணர் பேத்தி மரணம்

Update: 2022-11-20 20:18 GMT


தமிழ் மொழியின் சிறப்புகளைப் போற்றி வளர்த்ததோடு அதனை உலகறிய செய்த தமிழ் அறிஞர்களில் முக்கியமானவர் தேவநேய பாவாணர். இவருடைய பேத்தி பரிபூரணம் (வயது 57). இவர், மதுரையில் உள்ள தேவநேய பாவாணரின் மணிமண்டபத்தில் காப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக பரிபூரணம் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில், அவருக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிபூரணம் நேற்று பரிதாபமாக இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்