திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-01 18:06 GMT

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் வெயில் சுட்டெரித்தாலும் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 52.18 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 2.17 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக மருங்காபுரி பகுதியில் 6.42 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. லால்குடி, சமயபுரம் பகுதியில் மழை பெய்யவில்லை. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணிவரை உள்ள 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-

மருங்காபுரி- 64.2, தென்பரநாடு-62, வாத்தலை அணைக்கட்டு- 57.6, மணப்பாறை- 46.4, துறையூர்-45, கோவில்பட்டி-35.4, விமானநிலையம் 38.2, நவலூர்குட்டப்பட்டு-25.5, நந்தியாறு அணை-25.2, பொன்னணியாறு அணை-25, கல்லக்குடி-15.4, புலிவலம்-15, பொன்மலை-12.8, தா.பேட்டை-10, துவாக்குடி ஐ.எம்.டி.ஐ.- 9, புள்ளம்பாடி-8.4, முசிறி-7.2, திருச்சி டவுன்- 5.3, கொப்பம்பட்டி-5, சிறுகுடி-4.8, திருச்சி ஜங்ஷன்-3, தேவி மங்கலம்-1.4,

Tags:    

மேலும் செய்திகள்