மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்

மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்.;

Update:2023-08-13 23:38 IST

புதுக்கோட்டையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதில் நகரப்பகுதியில் நிஜாம்காலனி, போஸ்நகர் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. கட்டிட கட்டுமானத்தில் கட்டப்பட்டிருந்த சாரம் ஒன்றும் சரிந்தது. இவை மின்சார கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் இரவில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சீரமைப்பு பணி நடைபெற்றது. அப்போது மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் சாரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது. இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-11, பெருங்களூர்-3, புதுக்கோட்டை-34, ஆலங்குடி-16.30, கந்தர்வகோட்டை-4.60, கறம்பக்குடி-22.60, மழையூர்-27.40, கீழணை-2.80, அரிமளம்-46, ஆயிங்குடி-2.40, குடுமியான்மலை-3, அன்னவாசல்-2, உடையாளிப்பட்டி-11.50, கீரனூர்-22, காரையூர்-7.

Tags:    

மேலும் செய்திகள்