மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்

மதுரை ஐகோர்ட்டில் வருகிற 3-ந்தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2023-09-29 20:00 GMT

மதுரை ஐகோர்ட்டில் வருகிற 3-ந்தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

பொதுநல வழக்குகள்

அதன் விவரம் வருமாறு:-

முதல் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் பொது நல வழக்குகள், கிரிமினல் அவமதிப்பு வழக்குகள், மேல்முறையீடு வழக்குகள், ஆட்கொணர்வு மனுக்கள், அனைத்து கிரிமினல் வழக்குகள் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்பட) ஆகியவற்றை விசாரிக்கின்றனர்.

டிவிஷன் பெஞ்ச் இல்லாத நேரத்தில் நீதிபதி எம்.சுந்தர் பழைய கிரிமினல் அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார். அதேபோல நீதிபதி சக்திவேல், பழைய கிரிமினல் வழக்குகள் (குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவுகள் 407, 482 ஆகியவற்றின்கீழ் தாக்கலாகும் மனுக்கள்), அதுதொடர்பான ரிட் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றார்.

2-வது டிவிஷன் பெஞ்சில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமிநாராயணன் ஆகியோர் அனைத்து ரிட் மனுக்கள், ரிட் அப்பீல் மனுக்களை விசாரிக்கின்றனர்.

3-வது டிவிஷன் பெஞ்சில் நீதிபதிகள் டீக்காராமன், பாலாஜி ஆகியோர் அனைத்து சிவில் அப்பீல் வழக்குகளை விசாரிக்கின்றனர்.

நிலச்சட்டம்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 2022-ம் ஆண்டு முதல் தாக்கலான பொது சிறு வழக்குகள், மணல் மற்றும் தாதுக்கள், நில சீர்திருத்தம், நில குத்தகை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிலச்சட்டம் தொடர்பான வழக்குகள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், சுதந்திர போராட்ட தியாகி பென்சன் வழக்குகள், வேளாண் உற்பத்தி சந்தை தொடர்பான வழக்குகள் மற்றும் வேறு தனிநீதிபதி விசாரிக்காத ரிட் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் தாக்கலான பொது சிறு வழக்குகள், கனிம வளம், நிலச்சட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், தியாகி பென்சன், வேளாண் உற்பத்தி சந்தை தொடர்பான வழக்கு மற்றும் வேறு தனிநீதிபதி விசாரிக்காத வழக்குகளை விசாரிக்கிறார்.

நீதிபதி புகழேந்தி, 2019-ம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வரி, சுங்கம், கலால், வனம், தொழில், மோட்டார் வாகனங்கள் மற்றும் அறநிலையத்துறை, வக்பு வாரியம் சம்பந்தமான வழக்குகள், பொது சிறு வழக்குகள், கனிம வளம், நிலச்சட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், தியாகி பென்சன், வேளாண் உற்பத்தி சந்தை தொடர்பான வழக்கு மற்றும் வேறு தனிநீதிபதி விசாரிக்காத வழக்குகளை விசாரிக்கிறார்.

நீதிபதி பட்டு தேவானந்த், 2019-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள சிவில் ரிவிஷன் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி சந்திரசேகரன், 2021-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தாக்கலான 2-வது அப்பீல் மனுக்கள் அனைத்தையும் விசாரிக்கிறார்.

ஜாமீன், முன்ஜாமீன்

நீதிபதி சிவஞானம், ஜாமீன், முன்ஜாமீன் தொடர்பான அனைத்து மனுக்களையும் விசாரிக்கிறார். நீதிபதி இளங்கோவன், 2022-ம் ஆண்டு முதல் தாக்கலான கிரிமினல், ரிட் மனுக்களை விசாரிக்கிறார்.நீதிபதி முரளி சங்கர், 2020-ம் ஆண்டில் இருந்து தாக்கலான சிவில் ரிவிஷன் மனுக்களையும், நிறுவனங்கள் தொடர்பான அப்பீல் மனுக்களையும் விசாரிக்கிறார்.

நீதிபதி ஸ்ரீமதி, 2017-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரை தாக்கலான 2-வது அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.நீதிபதி விஜயகுமார், 2020-ம் ஆண்டு முதல் தாக்கலான தொழிலாளர் மற்றும் சேவை தொடர்பான ரிட் மனுக்களை விசாரிக்கிறார்.நீதிபதி விக்டோரியா கவுரி, 2020-ம் ஆண்டு வரை தாக்கலான மற்றும் 2-வது சிவில் சிறு அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், 2021-ம் ஆண்டு வரை தாக்கலான கிரிமினல், ரிட் மனுக்கள், கிரிமினல் அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.நீதிபதி கலைமதி, 2016-ம் ஆண்டு வரை தாக்கலான 2-வது அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.நீதிபதி வடமலை, 2022-ம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் உள்ள சி.பி.ஐ., லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் (ஜாமீன், முன்ஜாமீன் தவிர), கிரிமினல் அப்பீல் மனுக்கள், கிரிமினல் ரிவிஷன் மனு ஆகியவற்றை விசாரிக்கின்றனர். இந்த தகவல் ஐகோர்ட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்