வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட குப்பையன் காடு பகுதியில் வசிப்பவர் சுரேஷ்குமார்(வயது45). இவர், அந்த பகுதியில் சாராய ஊறல் போட்டு விற்பனைக்காக தயார் செய்வதாக வேதாரண்யம் சரக துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரபோசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு போடப்பட்டிருந்த 200 லிட்டர் சாராய ஊறல்களை கொட்டி அழித்தனர். பின்னர் சாராயம் ஊறல் போட்டு இருந்த சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.