வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்
வாழையில் நூற்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனா்.
கடலூர்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல இறுதி ஆண்டு தோட்டக்கலைதுறை படிக்கும் மாணவர்களுக்கான விவசாய பயிற்சி முகாம் சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் மஞ்சக்குழி ஊராட்சிக்குட்பட்ட சம்மந்தம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஒரு பகுதியாக நேற்று வாழையை தாக்கும் நூற்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து ஊர் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தோட்டக்கலைத்துறை மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள், விவசாயிகள், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.