காயத்துடன் உயிருக்கு போராடிய பருந்தை மீட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு
காயத்துடன் உயிருக்கு போராடிய பருந்தை துணை போலீஸ் சூப்பிரண்டு மீட்டு சிகிச்சை அளிக்க உதவி செய்தார்.;
திருவாடானை,
திருவாடானை தாலுகா ஆக்களூர் கிராமத்தின் அருகே நேற்று இறக்கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடியவாறு பருந்து ஒன்று துடித்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் இதை பார்த்து தனது வாகனத்தை நிறுத்தி உயிருக்கு போராடிய பருந்தை மீட்டார். பின்னர் அவர் போலீசாரை வரவழைத்து அவர்களிடம் பருந்தை கொடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து அதற்கு சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
பின்னர் போலீசார் பருந்தை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பருந்துக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.