ரேஷன் கடை பணியாளர்களுக்கு துறை சார்ந்த பயிற்சி

ரேஷன் கடை பணியாளர்களுக்கு துறை சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-10-01 18:30 GMT

அரியலூர் மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு 70 விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டது. இந்தநிலையில், புதிதாக பணியில் சேர்ந்த விற்பனையாளர்களுக்கு பொது வினியோக திட்ட பணிகளில் துறையின் பங்களிப்பு பற்றி விரிவாக பயிற்சி அளிக்கும் வகையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கூட்டுறவுத்துறை சங்கங்களின் இணைப்பதிவாளர் தீபா சங்கரி தலைமை தாங்கினார். மாவட்ட துணை பதிவாளர் அரப்பளி, சார்பதிவாளர் நதியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு, உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினர். உணவு தர கட்டுப்பாட்டு அலுவலர் திவ்யப்பிரியா பங்கேற்று உணவுப்பொருள் விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், பெறவேண்டிய சான்றிதழ்கள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்