கள்ளக்குறிச்சியில்பேரிடர்களில் சிக்குபவர்களை மீட்பது குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம்
கள்ளக்குறிச்சியில் இயற்கை பேரிடர்களில் சிக்குபவர்களை மீட்பது குறித்து மாணவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.;
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தீயணைப்பு துறை சார்பில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியை சோ்ந்த மாணவர்களிடம் நீர் நிலையங்களில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பாக செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையிலான
உதவி மாவட்ட அலுவலர்கள் செந்தில்குமார், ஜமுனா ராணி ஆகியோர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு இயற்கை பேரிடர்களில் சிக்குபவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
தார்ப்பாய் மூலம் மீட்பு
மேலும், தீயணைப்பு வீரர்கள் தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர் நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், அவசர காலங்களில் மாடி கட்டிடங்களில் மாடிப்படி வழியாக வரமுடியாத நேரத்தில் கயிறு மற்றும் தார்ப்பாய் மூலம் மீட்பது குறித்தும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.
அதே போன்று, கூட்ட நெரிசலில் தவறி கீழே விழுந்தால் எவ்வாறு தற்காத்து கொள்வது, ஆடையில் தீப்பற்றிக்கொண்டால் தற்காத்தல் முறை, விபத்தில் வாகனங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உஷா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, டாக்டர் பழமலை, துறைத்தலைவர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.