மக்கும், மக்காத குப்பை குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி

வைத்தீஸ்வரன் கோவிலில் மக்கும், மக்காத குப்பை குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-07-03 18:38 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன், துணைத்தலைவர் அன்பு செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் நிலை உதவியாளர் பாமா வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் பேசுகையில், பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்கள் இல்லம் தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக வீடு தோறும் கணக்கெடுக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 30-ந்தேதி தேதி வரை நடைபெற உள்ளது. குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு பேரூராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படும் என்றார். இதில் வரி தண்டலர் அமுதா, துப்புரவு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி தூய்மை பணியாளர்கள் செய்து காண்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்