புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பழனிசெட்டிபட்டி கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே தனி நபருக்காக பாலம் கட்டுவதை கண்டித்தும், இந்த பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.