பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணக்கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-12-19 18:45 GMT

மயிலாடுதுறை நகரில் பாதாளசாக்கடை கழிவுநீர் ஆள்நுழைவு தொட்டிகள் வழியாக பிரதான சாலைகளான பட்டமங்கலத்தெரு, அவையாம்பாள்புரம், அரசு ஆஸ்பத்திரிசாலை, கூறைநாடு, காவிரிக்கரை உட்பட பல்வேறுஇடங்களில் சாலைகளில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும். காவிரி மற்றும் வடிகால் வாய்க்கால்களில் பாதாளசாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மனோன்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் பொன்.இமானுவேல் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் இடும்பையன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் பொறுப்பாளர்கள் பிரதிப், மகாலிங்கம், மாசிலாமணி, எழிலரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்