பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-27 18:59 GMT

கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு சுயாட்சி இந்தியா மற்றும் பெண்கள் முற்போக்கு முன்னணி, மக்கள் அதிகாரம், சமூக கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு, திராவிடர் கழகம் தலித்து விடுதலை முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுய ஆட்சி இந்திய தேசிய தலைவர் கிறிஸ்டினா சாமி தலைமை தாங்கினார். பெண்கள் மேற்போக்கு முன்னணியை சேர்ந்த பிலோமினா கண்டன உரையாற்றினார். 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 14 பேரை கொன்று, கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை விடுதலை செய்ததை கண்டித்தும், அவர்களின் விடுதலையை ரத்து செய்து அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்ப வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்