கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update:2023-03-15 01:00 IST
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சூளகிரி:-

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சூளகிரி வட்டக்கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் மனோஜ்குமார், செயலாளர் அகிலன், பொருளாளர் வெண்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்