திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-09-22 18:45 GMT

மனுசாஸ்திரத்தை தடைசெய்யக்கோரி, திராவிடர் விடுதலை கழகத்தினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியதை திரித்து கூறிய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு வந்த மயிலாடுதுறை போலீசார் தடையின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திராவிடர் விடுதலை கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பாளர் வேலுகுணவேந்தன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 15 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்