தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-18 14:11 GMT

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் சப்- கலெக்டர் அலுவலகம் எதிரில் கண்டன ஆவ்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லி பாபு தொடங்கி வைத்து பேசினார்.

இதில் மலைவாழ் மக்கள் சங்க தலைவர் லட்சுமணராஜா, மாவட்ட செயலாளர் சாமிநாதன், துணைத் தலைவர் வீரபத்திரன், கன்வீனர் கேசவன் கலந்து கொண்டு பேசினார்கள். ஜவ்வாது மலை நச்சுக்கொட்டை மேச்சல் புறம்போக்கு பகுதியை சுற்றியுள்ள குறும்பேறி கொல்ல கொட்டாய், போலி வட்டம், சுகாதார வட்டம், மாம்பாக்கம், பனந்தோப்பு, நெத்திமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதியில் வனத்துறையினர் அத்துமீறி நுழைவதை தடை செய்ய வேண்டும், கால்நடை மேய்ப்பதற்கும், விறகு பொறுக்குவதற்கும் விவசாயிகளின் உரிமையை பறிக்காதே, அதற்கு தினமும் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஜாபர், சாதிக், ரங்கன், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்