ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பழனியில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-07 19:15 GMT

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் பழனி வட்டக்கிளை சார்பில், பழனி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நளினா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, ராமநாதபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளரின் (வளர்ச்சி) ஊழியர் விரோதப்போக்கை கண்டித்தும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்