மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கூடலூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கூடலூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கூடலூர்
மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்து அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சலீம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கீர்த்தனா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மணிப்பூரில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களை கண்டித்தும், அங்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பெண்கள் குழந்தைகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது