வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பொள்ளாச்சி
திருச்சி மாவட்டம் துறையூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று மாலை தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட கிளை தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் வருவாய் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.