கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலை ஊற்றி ஆர்ப்பாட்டம்

கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் பாலை ஊற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-10-20 00:02 GMT

திண்டுக்கல்,

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதால், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும். அதன்படி பசும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.45-ம், எருமை பாலுக்கு லிட்டருக்கு ரூ.54-ம் வழங்க வேண்டும். இதேபோல் தமிழ்நாடு அரசு ஒரு லிட்டர் பாலுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 வழங்க வேண்டும்.

சாலையில் பாலை கொட்டினர்

மேலும் கடந்த 2017-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவின்படி பால் கொள்முதல் செய்யும் ஆரம்ப நிலையங்களில் வாகனத்தில் பாலை ஏற்றுவதற்கு முன்பு தரம், அளவை குறித்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சாலையில் பாலை ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்