அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;

Update:2022-11-04 02:01 IST

நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோமதிநாயகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி ஆசிரியர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் பொன்ராஜ், நிர்வாகி கோபாலன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை களைய வேண்டும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த அதே நாளில் அகவிலைப்படி வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரெயில் பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்