மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-06-26 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் வீடு இல்லாத ஏழைமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத் நிறுவன தலைவர் அன்பு ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி பகுதியில் 20 ஆண்டுக்கு மேலாக குடியிருந்து வரும் சொந்த வீடு இல்லாத ஏழை, நடுத்தர மக்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர், தாலுகா அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். இதில் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்திய மனுக்கள் பரிந்துரை செய்யப்பட்டு தகுதி அடிப்படையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட பட்டா பிரிவில் உள்ளது. இந்த மனுக்களையும், இன்று கொடுத்துள்ள 100-க்கும் மேற்பட்ட மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து, சம்மந்தப்பட்ட ஏழைமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் செல்லப்பா, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மாநில துணை பொது செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால் துரை, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் நெப்போலியன், பொன் மாடசாமி, மண்டல மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா, நகர மகளிர் அணி செயலாளர் செல்வகனி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் முத்து லட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் ஜெயாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்