குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-06 18:59 GMT

அரவக்குறிச்சி அருகே ஈசநத்தத்தில் குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இதற்கு ஈசாநத்தம் ஊராட்சி தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் குடகனாறு பாதுகாப்பு சங்க திண்டுக்கல், கரூர் மாவட்ட தலைவர் ராமசாமி, செயலாளர் பொம்முசாமி, கரூர் மாவட்ட விவசாயிகள் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்வராஜ், குடகனாறு பாசன விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குடகனாறு வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும், குடகனாற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், குடகனாறு அணையின் இடது, வலது புற பாசன வாய்க்காலை தூர்வாரி பிரதான வாய்க்காலியின் அருகாமையில் உள்ள குளங்களுக்கு உபரிநீரை சேமிக்க வேண்டும், நங்காஞ்சியாறு அணையின் பாசன வாய்க்காலுக்கு தண்ணீர்திறந்து விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்