அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-27 20:01 GMT

பாளையங்கோட்டை:

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டீன் அலுவலகம் முன்பு நெல்லை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை வட்ட கிளை தலைவர் பாஸ்கர், வட்ட கிளை செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

1.7.2022 முதல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி, 1.1.2020 முதல் முடக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசின் அனைத்து துறைகளிலும் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுகாதார போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், அரசு செவிலியர் சங்கத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்