சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-15 19:13 GMT


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க விருதுநகர் மாவட்டக்கிளையினர் காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு துறை காலிப்பணியிடங்களில் கல்வி தகுதி அடிப்படையில் 50 சதவீத அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். ஆண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்த 62 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில செயலாளர் சுப்புக்காளை சிறப்புரையாற்றினார். பல்வேறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். மாநில துணைத்தலைவர் கண்ணன் நிறைவுரையாற்றினார். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்தர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்