திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகே திராவிடர் கழக மாணவரணி, இளைஞர் அணி சார்பாக நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில இளைஞரணி துணை செயலாளர் அறிவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் வரவேற்று பேசினார். தலைமைக்கழக அமைப்பாளர் சிந்தனை செல்வன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.