தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-10-26 20:23 GMT

நெல்லை மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல அலுவலகம் முன்பு நேற்று காலையில் மாநகர தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடைபெற வேண்டிய டெண்டர்களை மாநகராட்சி அலுவலகத்திற்கு மாற்றியதை கண்டித்தும், மேலப்பாளையம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாநில நெசவாளர் அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட அவை தலைவர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்