மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.திக.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-27 12:26 GMT


திருவண்ணாமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.திக.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் ஸ்ரீ குமரன், மாவட்ட பொருளாளர் நிர்மல் குமார், துணை செயலாளர்கள் உள்பட பலர் முன்னிலை வைத்தனர். திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில் தேர்தல் பிரிவு செயலாளர் மணிகண்டன், தொண்டரணி துணை செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தொண்டரணி செயலாளர் பூபாலன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்