பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

கழுகுமலையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-10 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை காந்தி மைதானத்தில் நேற்று பா.ஜ.க.வினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். கழுகுமலை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவமனையில் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை தலைவர்கள் மதிராஜசேகரன், முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொது செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மாநில பொது குழு உறுப்பினர் போஸ், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்