கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-25 17:51 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கரூர் மாவட்ட தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தாமோதரன் கண்டன உரையாற்றினார். இதில் கரூர் கோட்ட செயலாளர் முத்துக்குமார், குளித்தலை கோட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட இணைச்செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கால்நடை ஆய்வாளர் பயிற்சியை போர்க்கால அடிப்படையில் தொடங்கி, கால்நடை பராமரிப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 6-வது ஊதியக்குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை-1 மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை சங்க கோரிக்கையின் வழி அமல்படுத்திட வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்