அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-20 17:26 GMT

திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர்களுக்கென தனியாக கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்ட பின்னரும், சத்துணவு கூட்டுறவு சங்கத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடன் வழங்குவதை கண்டித்தும், சத்துணவு கூட்டுறவு சங்கத்தில் கடன் முடித்த அங்கன்வாடி உறுப்பினருக்கு பங்கு தொகை, சேமிப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு கூட்டுறவு சங்கத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து உறுப்பினராக இருந்து கடன் பெறலாம் என சிறப்பு பேரவை தீர்மானத்தை கண்டித்தும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தவமணி முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் ரா.மாலதி, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பி.மாலதி, சங்க நிர்வாகிகள் கஜேந்திரன், லெனின், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்