ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு அறிவித்தபடி கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை காவலர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்தபடி தூய்மை காவலர் மற்றும் துப்புரவு பணியாளருக்கு மாத ஊதியம் ரூ.21,000 வழங்க வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். தீபாவளி ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.