கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் நடிகர் கணல்கண்ணனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு அம்பேத்கர் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சினிமா நடிகர் கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜெய் பீம் தொழிலாளர் நலச் சங்க தலைவர் செண்பகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. காளிமுத்து, தமிழ் புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே. வீரபெருமாள், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் அ. மாணிக்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.