மின்தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் குடியிருப்பு பகுதியில் மின்தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் முகவை மாவட்ட முன்னேற்ற கூட்டமைப்பின் சார்பில் காட்டூரணி இந்திரா நகர் அய்யாஊருணி குடியிருப்பு பகுதியில் அமைய உள்ள மின்தகன மேடை பணிகளை கண்டித்தும், அதனை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் தீரன்திருமுருகன் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் அஜ்மல்சரிபு முன்னிலை வகித்தார். அழகர்சாமி பாண்டியன் வரவேற்று பேசினார். இதில், நிர்வாகிகள் கோபால், பாதுசா, ராமமூர்த்தி, சத்தியமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோபால் நன்றி கூறினார்.