மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோட்டைப்பட்டினம், ஆலங்குடியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோட்டைப்பட்டினம் கடைவீதியில் கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் சாலிஹூ, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அபுசாலிகு ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் ஆவுடையார்கோவில் பங்குத்தந்தை அருளரசு, மனித நேய மக்கள் கட்சியின் மாநில பேச்சாளர் பழனி பாரூக் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தை தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல் ஆலங்குடி வடகாடு முக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பா.ஜனதா அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.