டோல்கேட் கட்டண உயர்வை குறைக்கக்கோரி போக்குவரத்து சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

டோல்கேட் கட்டண உயர்வை குறைக்கக்கோரி போக்குவரத்து சம்மேளனம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-03-31 20:41 GMT

கருப்பூர்:

அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்க கட்டண உயர்வு, பெட்ரோல் கியாஸ் உள்ளிட்ட அத்தியாவசிய விலைஉயர்வை கண்டித்து விலையை குறைக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கருப்பூர் கோட்டகவுண்டம்பட்டியில் சுங்கச்சாவடி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க பொதுச் செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மூர்த்தி, ஓமலூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட மண்டல குழு உறுப்பினர் செம்மல், மாநில உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் ராஜா, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்