சாத்தூர்,
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து சாத்தூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அம்மா பேரவை மாநில துணைச்செயலாளர் சேதுராமானுஜம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்த தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.