ஆர்ப்பாட்டம்
திருச்சுழியில் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சுழி,
திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் சரவணன் சிறப்புரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சுழி ஊரக வளச்சித்துறை அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் காளிமுத்து நன்றி கூறினார்.