மாலை நேர ஆய்வு கூட்டங்களை கைவிட வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாலை நேர ஆய்வு கூட்டங்களை கைவிட வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-27 20:08 GMT

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட கிளை சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவசங்கர், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க நிர்வாகி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிக வேலைப்பளு காரணமாக உயிர் இழந்த ஊராட்சி செயலாளர் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். விடுமுறை நாட்களில் காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். மாலை நேர ஆய்வு கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்