கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓசூரில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-03 18:45 GMT

ஓசூர்

ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட சி.ஐ.டி.யூ. செயலாளர் ஸ்ரீதர், பொது தொழிலாளர் சங்க தலைவர் பீட்டர், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ஜி.ஸ்ரீதர், சிறு வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்