கரும்பு, தேங்காயுடன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காயை சேர்த்து வழங்க கோரி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-26 18:57 GMT

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காயை சேர்த்து வழங்க கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, விவசாய அணி மாநில துணைத் தலைவர் சத்யபானு, மாவட்ட தலைவர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வினர் கைகளில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கரும்புகளை ஏந்திக் கொண்டு, தேங்காய், இளநீர் மற்றும் வெல்ல மூட்டையுடன் நின்று தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது பொங்கல் பரிசு தொகுப்பில் தமிழக அரசு முழு செங்கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காயை சேர்த்து வழங்க கோரியும், ரூ.ஆயிரத்திற்கு பதிலாக ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

ரூ.5 ஆயிரம் வழங்க

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார், நகரத் தலைவர் சரவணன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத் தலைவர் லோகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாநில துணைத் தலைவர் துரைசாமி, தமிழக அரசு பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத்தொகுப்பில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காயை சேர்த்து வழங்க வேண்டும். அதோடு கரும்பு விவசாயிகளுக்கு தாமதமின்றி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்