மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2022-12-11 00:15 IST

ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் போலீசாலை நியமிக்க வேண்டும், இரவு நேரங்களில் மளிகை கடை மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே போலீசார் கூடுதலாக இரவு நேர ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும், தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அனுமதி கடிதம் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் கொடுக்கப்பட்டது.

கைது

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எலச்சிபாளையம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதில் எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, கிட்டுசாமி, ரமேஷ், ரஹ்மத் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்