நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துதி.க. இளைஞரணி,மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-22 19:30 GMT

ஓசூர்:

ஓசூர் மாவட்ட தி.க. இளைஞரணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து நேற்று ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் டார்வின் பேரறிவு தலைமை தாங்கினார். மாணவர் கழக தலைவர் ஆகாஷ் வரவேற்றார். இதில், ஓசூர் மாவட்ட தி.க.தலைவர் வனவேந்தன் மற்றும் இளைஞரணி, மாணவர் கழக நிர்வாகிகள், மற்றும் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்