ஆர்ப்பாட்டம்
இந்தியன் கூட்டணி கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்தும், அதனை தடுக்க தவறிய, உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் இந்தியன் கூட்டணி கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தேவராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நேரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லிங்கசாமி, ம.தி.மு.க.வின் அபிராம், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிக்கந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.