ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

பரமக்குடியில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-26 16:55 GMT

பரமக்குடி

பரமக்குடியில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு

பரமக்குடி பெரியகடை பஜார், சின்னக்கடை வீதி, ஐந்துமுனைப் பகுதி, பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நகராட்சி இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். அதேபோல் நகராட்சி இடங்களில் வாருகால்களை மறைத்து வீடு மற்றும் கடைகளை கட்டியுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மழை நீரும், வாருகால் தண்ணீரும் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் மழைநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே குளங்கள் போல் தேங்கி கிடக்கிறது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொறியாளர் அய்யனார் தலைமையில் நகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் நேற்று பெரிய கடை பஜார், காந்தி சிலை, ஆர்ச் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு

வாருகால்களை மறைத்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனாலும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டது. மேலும் இனி வரும் காலங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்