நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 7 வீடுகள் இடித்து அகற்றம்
கன்னியாகுமரியில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 7 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
கன்னியாகுமரியில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 7 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
நீர்நிலை ஆக்கிரமிப்பு
கன்னியாகுமரி மகாதானபுரம் நான்கு வழிச் சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே பகவதி அம்மாள்புரம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பிள்ளையார் குளம் மற்றும் ஆறு ஆகியவற்றை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
இந்தநிலையில் நேற்று காலை பொதுப்பணித் துறையினர் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதற்காக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர் வல்சன் போஸ் தலைமையில் ஏராளமானோர் வந்தனர்.
7 வீடுகள் அகற்றம்
இதனை தொடர்ந்து அங்கு பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு வீடுகளை இடிக்கும் பணி நடந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் வீடுகளை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மொத்தம் 7 வீடுகள் அகற்றப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.