டான்ஜெட்கோ எனும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இரண்டாக பிரிப்பு

மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தியில் இடர்பாடுகள் இருக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

Update: 2024-07-12 15:39 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்து அதனை பகிர்ந்து வரும் பணியை டான்ஜெட்கோ (TANGEDCO) மேற்கொண்டு வருகிறது. இதன் முழு விரிவாக்கம் என்பது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமாகும் 

இந்நிலையில் நிர்வாக காரணங்களாக டான்ஜெட்கோவை 2 ஆக பிரிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. இதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி டான்ஜெட்கோ இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என்ற பெயரில் இயங்கிய டான்ஜெட்கோ இனி தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் என்று ஒரு பிரிவாகவும், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்று இன்னொரு பிரிவாகவும் செயல்பட உள்ளது.

இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் என்பது நிலக்கரி, டீசல், அணு அல்லது வேறு ஏதேனும் எிரபொருட்கள் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும். அதேபோல் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்பது காற்று, சூரியஒளி, உயிரி எரிபொருள், கடல் அலை உள்ளிட்டவற்றின் மூலம் எரிசக்தி உற்பத்தியை மேற்கொள்ள உள்ளது.

அதாவது நிர்வாக ரீதியாக டான்ஜெட்கோ இரண்டாக பிரிக்கப்பட்டாலும் கூட மக்களுக்கான மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தியில் எந்த விட இடர்பாடுகளும் இருக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்