இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை
இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூரில், புறவழிச்சாலையில் கோனேரி பாளையம்-ஆலம்பாடி இடையே இறைச்சி-மீன் கழிவுகள் ஓட்டல் மற்றும் வீடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்படுகிறது.இதனால் சுற்றுப்புற சூழல் சீர்கேடு அடைவதுடன்,இறைச்சி கழிவுகளை நாய்கள் இழுத்துச் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.பெரம்பலூர் புறவழிச்சாலையில் இறைச்சி கழிவுகள்,குப்பை மாசுக்களை கொட்டுவதை தடுக்கவும்,குப்பைகளை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்கவும் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.