தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-06-01 18:45 GMT

நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. வர்த்தக அணி செயற்குழு கூட்டம், மேலப்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சிட்டி சேக் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் கனி, தாழையூத்து சிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா வரவேற்றார். கூட்டத்தில் வர்த்தக அணி பணிகள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில், தென்காசி-நெல்லை இடையே நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வியாபாரிகளின் நலன் கருதி நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவரை அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லையில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணை செயலாளர் புகாரி சேட் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்