துபாயில் தவிக்கும் குன்னூர் பெண்ணை மீட்டுத்தர கோரிக்கை

துபாயில் தவிக்கும் குன்னூர் பெண்ணை மீட்டுத்தர கோரிக்கை;

Update:2023-02-19 16:04 IST

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள். (வயது 44). இவருக்கு ஆர்த்தி மற்றும் ப்ரீத்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். கணவரை விட்டு கடந்த 5 வருடங்களுக்கு முன் அந்தோணியம்மாள் தனியாக பிரிந்து விட்டார். அதன் பின்னர் அந்தப் பகுதியில் கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பம் நடத்தி வந்தார். குடும்ப வறுமை சூழல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு துபாய்க்கு சமையல் வேலைக்காக சென்று உள்ளார்.

தந்தை ஆதரவில்லாததால் பாட்டி ராணி என்பவரின் ஆதரவில் ஆர்த்தி மற்றும் ப்ரீத்தி வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தோணியம்மாள் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கடைசியாக தொலைபேசி மூலம் குடும்பத்தினருடன் பேசியுள்ளார். அதன் பின்னர் அந்தோணியம்மாளை தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்தோணியம்மாளின் நிலை தற்போது வரை என்ன என்பது தெரியவில்லை. எனவே துபாயில் சிக்கி தவிக்கும் தாயை கண்டறிய தமிழக அரசும், வெளியுறவு துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தோணியம்மாளின் மகள்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்